English
  முகப்பு
 
  விசா விபரங்கள், படிவங்கள் மற்றும் கட்டணங்கள்
  விண்ணப்பப் படிவம்
  விசாவிற்கு அத்தியாவசியமானவை
  கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
 

விசா கட்டண்ம்

  தேவையான ஆவணங்கள்
 
  பணக்கொடுப்பனவு
  நேர ஒழுங்கு
  விடுமுறைப்பட்டியல்
  நேர்முகப்பரீட்சை ஒழுங்கு
  வழமையாக கேட்கப்படும் கேள்விகள்
 
  கடவுச்சீட்டு தேடல்
 

தகவல் நிலைய எண்

  குறுந்தகவல் பரிமாற்ற எண்
  கடவுச்சீட்டு மீள் அளித்தல்
 
  மின் அஞ்சலிற்கான பதில்
  வாடிக்கையாளர் கருத்து
 
 
 

வழமையாக கேட்கப்படும் கேள்விகள் (சந்தேகங்கள்)

  1. இந்தியா செல்ல எனக்கு விசா தேவையா?

ஆம்,  இந்தியாவுக்கு வருகைதரும் அனைத்து வெளிநாட்டவரும் செல்லுபடியான விசா வழங்கப்பட்ட கடவுச்சீட்டை வைத்திருப்பது அவசியம்

  1. நான் இந்திய விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

தொடர்பு கொள்ளவும்

இந்திய விசா விண்ணப்பநிலையம்

433, காலி வீதி, கொழும்பு -03, இலங்கை

தகவல் நிலையம்: (+94) 11 4505588

  1. ஆங்கிலத்தில் அல்லாத ஆவணங்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்றுக்கொள்ளுமா?

இல்லை, விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில் மாத்திரமே நிரப்பப்படல் வேண்டும்

  1. விசா விண்ணப்பத்திற்கு தேவையான வேறு ஆவனங்கள் யாவை?

தயவு செய்து பார்வையிடவும் www.hcicolombo.org/passport_visaserv.shtml

  1. ஒரு விசா விண்ணப்பத்திற்கான விசா ஒழுங்குமுறை நிறைவடைய எவ்வளவு காலமாகும்?

தயவு செய்து பார்வையிடவும் www.hcicolombo.org/passport_visaserv.shtml

  1. எனது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின் அதன் பெறுபேறுகளை எவ்வாறு அறிந்து கொள்வது?

உங்கள் பெறுபேறுகளை VFS இணையதளத்தில் கடவுச்சீட்டு தேடல் மூலம் அறியலாம்

  1. இந்தியாவில் உள்ள எனது நண்பன் எனக்காக விசாவிற்கு விண்ணப்பிக்கலாமா?

இல்லை, விண்ணப்பதாரிகள் அவர்கள் வசிக்கும் நாட்டில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்

  1. என்னால் இந்தியாவில் கல்வி கற்க முடியுமா?

ஆம், ஒரு செல்லுபடியாகும் மாணவர் விசா இருந்தால் முடியும்

  1. என்னால் இந்தியாவில் தொழில் செய்ய முடியுமா?

ஆம், ஒரு செல்லுபடியாகும் தொழில் விசா இருந்தால் முடியும்

  1. எனது விசா எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?

உல்லாசப் பிரயாண விசாக்கள் பொதுவாக 6 மாதத்திற்கு செல்லுபடியாகும், விசா செல்லுபடியாகும் காலம் உயர்ஸ்தானிகரகத்தின் தீர்மாணமாகவே அமையும்

  1. விசாகட்டணம் மீள் அளிக்கப்படுமா?

இல்லை, விண்ணப்பப்படிவம் மீள் பெறப்பட்டோ அல்லது விசா நிராகரிக்கப்பட்டோ இருந்தாலும் கட்டணம் மீள அளிக்கப்பட மாட்டாது

  1. இந்திய விசா விண்ணப்பநிலயத்தில், எனது கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள தயாராகிய நிலையில் உள்ளதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

உங்கள் பெறுபேறுகள VFS இணையதளத்தில் கடவுச்சீட்டு தேடல் மூலம் அறியலாம்

  1. நான் எனது கடவுச்சீட்டை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுக்கொள்ளலாமா?

இல்லை, கடவுச்சீட்டுக்களை விசாவுக்கு விண்ணப்பித்த இடத்தில் மாத்திரமே பெற்றுக்கொள்ளலாம்

  1. எனது கடவுச்சீட்டையும் விண்ணப்பப்படிவத்தையும் இந்திய விசா விண்ணப்பநிலையம் மாத்திரமா கையளிக்க முடியுமா?

ஆம்,  எனினும் ஆராய்சி விசா, உத்தியோக, தூதாண்மை கடவுச்சீட்டு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான கடவுச்சீட்டு என்பவற்றின் விண்ணப்பப்படிங்களை நேரடியாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சமர்ப்பிக்கலாம்

  1. எந்து கடவுச்சீட்டையும் விண்ணப்பத்தையும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாமா?

இல்லை

  1. நான் எனது விசா கட்டணத்தை எவ்வாறு செலுத்தலாம்?

பணம் மூலமாக மாத்திரமே

Copyright 2012. India Visa Application Centre. All Rights Reserved.  Disclaimer