|
இந்திய
குடிவரவுப் பணியகத்தில் வெளிநாட்டவர்களைப் பதிவுசெய்தல்
- வெளிநாட்டவர்
ஒருவர்-மானவர், தொழில், ஆராய்ச்சி, நுழைவு, மருத்துவம், மருத்துவ உதவி
ஆகிய விசாக்கள் மூலம் இந்தியா சென்று தொடர்ச்சியாக 180 நாட்களுக்கு
மேல் தங்கியிருக்க விரும்பின் அவர் இந்திய குடிவரவு பணியகத்தில் பதிவு
செய்தல் வேண்டும்
- இந்தியாவில்
வெளிநாட்டவர்கள் பிரதேச பதிவு காரியாலயத்தில் [FRRO] 14 நாட்களுக்குள்
பதிவு செய்து கொள்ளல் மிக அவசியமாகும்
- பதிவு செய்யும்
பதிவுகள் கடவுச்சீட்டில் குறிப்பிடப்படாது. பதிவின் போது வழங்கப்படும்
அட்டை/ வதிவிட உரிமைப்பத்திரம் இந்திய குடிவரவு குடியகல்வு
அதிகாரிகளினால் சோதணை செய்யப்படும். இதற்காக கட்டணம் அறவிடப்படாது.
பதிவுகள்/ வதிவிட உரிமைப்பத்திரம் இந்திய குடிவரவு பணியகத்தினால் அதன்
சட்டதிட்டங்களுக்கமைய வழங்கப்படும்
- நீண்டகால
விசாக்களுக்கான பதிவு பத்திரத்தை
ஒவ்வொரு தடவையும் இந்தியாவை விட்டு வெளியேறும் போது காண்பிக்கப்படல்
வேண்டும். கடைசி வெளியேற்றத்தின் போது அப்பதிவினை இந்திய குடிவரவு
குடியகல்வு அதிகாரிகளிடம் கையளித்தல் வேண்டும்
- மேலதிக விபரங்களுக்கு
www.immigrationindia.nic.in
தொடர்பு கொள்ளவும்
|