|
|
|
வழிக்காட்டி
விண்ணப்பபடிவத்தில் காணப்படும் விசா வகை பற்றிய
கட்டங்களை சரியான முறையில் பூரணப்படுத்தவும்
-
(S), (D), (M) என்பனமுறயே ஒற்றை, இரட்டை, பல,
எனப்படும் இந்திய பிரயாண ஒழுங்கு பதிவுகளாகும்.
(3M), (6M), (12M) என்பன விசா விண்ணப்பிக்கும்
கால எல்லையாகும். உங்களுடைய கடவுச்சீட்டின்
செல்லுபடியாகும் காலத்தை கவனத்தில் கொள்க. [ T
], [ B ], [ M ], [ MX ], [ S ], [ E ], [ TR ],
[ R ], [ C ], [ J ], மற்றும் [ X ] ஆகியவையே
விசா வகைகள் ஆகும்.
-
விசா விண்ணப்பப்படிவம் இலவசமாக
விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தின் நகல்களும்
ஏற்றுக்கொள்ளப்படும்
-
விசா விண்ணப்பப்படிவம் விண்ணப்பதாரியினால்
மாத்திரமே சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
-
விண்ணப்பப்படிவத்தின் எல்லா பகுதிகளும்
சரியாகவும் மிகக் கவனமாகவும் நிரப்பப்படவேண்டும்,
பூர்த்தி செய்யப்படாத படிவங்கள்
நிராகரிக்கப்படும்
-
தேசிய அடையாலஅட்டையின் அல்லது
பிறப்பத்தாட்சிப்பத்திரத்தின் பிரதி
விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.
மூலப்பிரதி நேர்முகப்பரீட்சையின் போது
சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
-
பழைய கடவுச்சீட்டுக்களும் (மூலப்பிரதிகள்
காட்டப்படல் வேண்டும்), இரட்டை பிராஜாவுரிமை/
வதிவிட உரிமை (பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்)
இருப்பின் அவை தொடர்பான தகவல்கள்
வழங்கப்படவேண்டும்
-
இரட்டை பிரஜாவுரிமையுடைய விண்ணப்பதாரிகள்
இரண்டு கடவுச்சீட்டுக்களையும், பிரதிகளையும் சமர்ப்பித்தல்
வேண்டும்
-
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதனால் விசா
வழங்கப்படும் என்பதற்காக உத்தரவாதம் இல்லை
-
விசா கட்டணம் மீள அளிக்கப்பட மாட்டாது,
விண்ணப்பம் மீள பெறப்பட்டாலோ அல்லது விசா
நிராகரிக்கப்பட்டாலோ கட்டணம் மீளளிக்கப்பட
மாட்டாது
-
விண்ணப்பித்த விசா கிடைத்தவுடன் மாத்திரமே உங்கள் பயண
ஒழுங்குகளை செய்யவும்
-
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் போதும்
பயணத்திற்கு முன்பும் உங்கள் விசா, பற்றுசீட்டு
தகவல்களை சரிபார்த்தல் உங்கள் கடமையாகும்
-
தகவல்களை மறைத்தலும், பிழையான தகவல்களை
வழங்குதலும் காரணம் கூறப்படாமல் விசா
நிராகரிக்கப்படுவதற்கு ஏதுவாக அமையும்
-
விசா வழங்கப்படுதல் நாட்டிற்குள் நுழைவதற்கான
அனுமதி/ உரிமை ஆகாது. அது குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின்
முடிவை பொறுத்தே அமையும்
-
இலங்கைப்பிரஜை அற்றவர்களும் இலங்கையை வதிவிடமாக
கொள்ளாதவர்களும் விண்ணப்பிக்கும் போது
கடவுச்சீட்டின் பிரதிகள், மற்றும் மேலதிகமான தொலை நகல்
(FAX Reference Form) படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
(எமது இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்)
-
இலங்கைக்கான வதிவிட விசா இல்லாத வெளிநாட்டு
பிரஜைகளின் விசா ( குறைந்தது 1 வருடம்), கட்டணம்
எதுவாக இருப்பினும் அதன் விசா தன்மை, கால எல்லை,
பதிவுகளின் எண்ணிக்கை என்பன மாற்றமடைவதற்கான
வாய்ப்புக்கள் உண்டு
-
ஏற்கெனவே செல்லுபடியாகும் ஒரு விசா இருக்கும் போது
புதிதாக விண்ணப்பித்தால் பழைய விசா தன்னிச்சையாக
இரத்து செய்யப்படுவதுடன் அதற்கான கட்டணம்
மீளளிக்கப்படமாட்டாது
-
குழந்தைகள் ( எவ்வயதினயினும் ) இந்தியாவிற்கு பயணிக்க வேண்டுமாயின்
தங்கள் பெயர் கொண்ட தனிப்பட்ட கடவுச்சீட்டுக்களை
வைத்திருப்பது அவசியம்
-
கீழ் வரும் சந்தர்ப்பங்களில் விசா செயல் முறை
தாமதமாகும். ( குறைந்தது 5 வேலை நாட்கள் )
-
வெளிநாட்டு வதிவிட விசாக்களை பெற்றுக்கொண்ட
இலங்கையர்
-
கடந்த 12 மாதங்கள் இலங்கையில் வசிக்காத
விண்ணப்பதாரிகள்
-
இந்தியாவின் நுழைவு அனுமதி பெற்றுக்கொள்ள
வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது
-
பாதுகாக்கப்பட்ட/ கட்டுப்படுத்தப்பட்ட
இடங்களுக்கு பயணிப்பவர்கள் (இணையதளத்தில்
மேலதிக தகவல்களை பெறலாம்)
-
சில நேரங்களில் ஆவணங்கள் மீள்
பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய கட்டாயம்
ஏற்படும் போது
-
பிழையான தகவல்களை வழங்குதல், தகவல்களை மறைத்தல்,
போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் விசாவுக்காக ஆதரவு
வழங்கல் மற்றும் விசா கால எல்லை முடிந்ததும்
தொடர்ந்தும் தங்கியிருத்தல், விசா ஒழுங்கை
பிரத்திக்சேபனை செய்தல் என்பன விசா பெற தகுதியின்மையாகும்
-
இந்திய விளையாட்டு கழகமொன்று ஒரு வெளிநாட்டு
விளையாட்டு கழகத்திற்கோ அமைப்பிற்கோ அல்லது
தனிப்பட்ட ஒரு விளையாட்டு வீரருக்கோ அழைப்பு
விடுக்கும் போது இந்திய விளையாட்டு, இளைஞர்
விவகார அமைச்சிடம் இருந்து அனுமதியை
பெற்றுக்கொள்ளல் அவசியமாகும்
-
இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட அல்லது
கட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்கு செல்ல
விரும்பும் விண்ணப்பதாரிகள்
உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படும் விசேட
அனுமதி படிவத்தையும் விண்ணப்பத்தையும்
சமர்ப்பித்தல் வேண்டும்
-
செல்வத்ற்கான காரணம் தெளிவற்று, மாற்றமடையும்
போதும் மற்றும் விசா நிராகரிக்கப்பட்டிருப்பினும் புதிய விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாது
-
முன்னய கடவுச்சீட்டு காணாமல்/
களவாடப்பட்டிருப்பின் அதற்காக பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்ட பிரதி தற்போதய
செல்லுபடியாகும் கடவுச்சீட்டுடன்
சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
-
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தொலைநகல் (FAX)
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது விசா மற்றும் எனைய
கட்டணங்கள் செலுத்தப்பட்டதன் பின்பே விசா செயல்
முறை ஆரம்பமாகும். விசா கட்டணம் மீள்
செலுத்தப்படாது என்பதனை கவனத்தில் கொள்க
-
விசா வழங்கப்பட்ட திகதியில் இருந்தே அதன் கால
எல்லை கணக்கிடப்படும்
-
இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு காரணம் எதுவும்
இன்றி விசாவை தாமதிப்பதற்கும், நிராகரிப்பதற்கும்
பூரண உரிமை உண்டு. விசாவுக்கான சகல பரிசோதனை
தீர்வுகளின் படியே விசா வழங்கப்படும்
-
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு, விசாக்களை
வழங்குவதற்கும், நிராகரிக்கப்பதற்கும், அதன் தன்மை,
செல்லுபடியாகும் காலம், பதிவுகளின் எண்ணிக்கை என்பவற்றைத் தீர்மானிக்கும் உரிமையும்
உண்டு (செலுத்தப்பட்ட
கட்டணம் எதுவாக இருப்பினும்)
|
|